நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 ஏடி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில், கமல்ஹாசன் வில்லனாகவும், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி ஆகியோர் நடித்துள்ளனர். சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக இப்படத்தை இயக்கியுள்ளார் நாக் அஸ்வின். அதேபோல், பான் இந்தியா படமாக தெலுங்கு, தமிழ் உட்பட பல மொழிகளிலும் வெளியாகியுள்ளது கல்கி 2898 ஏடி கிட்ட தட்ட 300 கோடி வசூலை ‘கல்கி’ திரைப்படம் நெருங்கிய சந்தோஷமான தகவலை தயாரிப்பு நிறுவனமான வைஜெந்தி மூவிஸ் அறிவித்துள்ளது. அதாவது இப்படம் நேற்றைய தினம் ரூ.298.5 கோடி வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. கல்கி இந்திய சினிமாவில் அடுத்த மையில் கல் என இந்த படத்தை பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
![‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் இரண்டு நாளில் ரூ.300 கோடி வசூல்](https://uthayannews.ca/wp-content/uploads/2024/05/Kalki-2898-new-update.jpg)