இந்திய ராணுவத் தளபதியாகப் பொறுப்பு வகித்த மனோஜ் பாண்டே ஓய்வு பெற்ற நிலையில், புதிய ராணுவ தளபதியாக உபேந்திர திவிவேதி பதவியேற்றுக் கொண்டார்.
இந்திய ராணுவத்தின் தளபதியான மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவிவேதி பொறுப்பேற்றுக்கொண்டார். ராணுவத்தின் துணைத் தளபதியாக பணியாற்றி வந்த லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவிவேதியை, அடுத்த ராணுவ தளபதியாக நியமித்து கடந்த 12-ந்தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ராணுவ துணை தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் திவிவேதி, நாட்டின் 30வது ராணுவ தலைமை தளபதியாவார். இவர் ராணுவத்தில் பல முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.