நெடுங்கேணியில் வல்வெட்டி மற்றும் சாவகச்சேரி பகுதிகளை சேர்ந்த இரண்டு பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து யாழ். மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் மகேசன் தெரிவித்தார்
அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்கள் இருவரும் வவுனியாவிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ள போதும், அவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்து சென்றதன் அடிப்படையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
நேற்று வரை 241 குடும்பங்களைச் சேர்ந்த 445 பேரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் விடுவிக்கப்படுவர்.
யாழ். மாவட்டத்தில் உள்ள மருதங்கேணியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில், பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த 40 தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெளிமாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணம் வருவோர் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தற்பொழுது நாட்டின் ஏனைய பகுதிகளில் கொரோனா வேகமாக பரவி வருவதால், யாழ் மாவட்டத்தில் முன்னேற்பாடுகளை மிக இறுக்கமாக செயற்படுத்த வேண்டியுள்ளது.