மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரும் மனுவில், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்5 பேரும் ஒப்பமிட்டுள்ளனர்.
அதேவேளை, துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கக் கோரும் மனுவில் தாங்கள் ஒப்பமிடவில்லை என்று, அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான கெஹலிய ரம்புக்வெல்ல, மகிந்த அமரவீர, விதுர விக்ரமநாயக்க, விமலவீர திசநாயக்க மற்றும் சுரேன் ராகவன் ஆகியோர் கூறியுள்ளார்.
துமிந்த சில்வாவுக்கு பொதுமன்னிப்பு அளிக்குமாறு ஜனாதிபதியிடம் கோருகின்ற மனு, ஒப்பமிடுவதற்காக தம்மிடம் வழங்கப்படவில்லை என்றும், அவ்வாறான ஒரு நகர்வு குறித்து தாங்கள் அறிந்திருக்கவில்லை என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரணதண்டனை தீர்ப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வாவை, பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யுமாறு கோரும் மனுவொன்றை அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.