(கனகராசா சரவணன்)
மட்டக்களப்பில்; முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் ‘படுக்கை புண்ணற்ற வாழ்வுக்கு காற்று மெத்தை’ எனும் தொனிப்பொருளில் இங்கிலாந்து மனிதநேய அமைப்பின் அனுசரனையுடன் டேற்ரா சரீட்டி , தமிழ் பரா விளையாட்டுக்கழகம் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்ட 13 பேருக்கு காற்று மெத்தை மண்முணை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (16) வழங்கி வைக்கப்பட்டது.
டேற்ரா சரீட்டி , தமிழ் பரா விளையாட்டுக்கழகம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த காற்று மெத்தை வழங்கிவைக்கும் நிகழ்வு மண்முணை வடக்கு பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதில் அதிதிகளாக மண்முணைவடக்கு பிரதேச செயலாளர் வாசுதேவன், சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.அருள்மொழி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.அருள், டேற்ரா சரீட்டி அமைப்பின் பணிப்பாளர் கே.ஜீவராஜா, ஆலோசகர். எல்.ஆர். டேவிற், ஆகியோர் கலந்துகொண்டு 13 பேருக்கான காற்று மெத்தையை வழங்கி வைத்தனர்.
வடக்கு கிழக்கில் முள்ளந்தண்டால் பாதிக்கப்பட்ட 200 பேருக்கு மேல் இருக்கின்ற நிலையில் முதற்கட்டமாக 50 பேருக்கு இந்த காற்று மெத்தை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.