நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். நடிகர் யோகி பாபு மண்டேலா படத்திற்கு பிறகு தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக யோகி பாபு நடிப்பில் பூமர் அங்கிள் திரைப்படம் வெளியானது. மேலும் யோகி பாபு, மண்ணாங்கட்டி, சட்னி சாம்பார், வானவன், ஜோரா கைய தட்டுங்க போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் யோகி பாபு, இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தின் இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் ‘போட்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இதில் யோகி பாபுவுடன் இணைந்து எம் எஸ் பாஸ்கர், சின்னி ஜெயந்த், கௌரி கிஷன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை மாலி அண்ட் மான்வி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் சிம்பு தேவன் என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஜிப்ரான் இந்த படத்திற்கு இசை அமைக்க மாதேஷ் மாணிக்கம் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்நிலையில் ‘தகிட ததிமி’ எனும் இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
![யோகிபாவு நடித்த 'போட்' படத்தின் 2-வது பாடல் அறிவிப்பு!](https://uthayannews.ca/wp-content/uploads/2024/07/Yogi-babus-boat-pada-second-song.jpg)