உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரயிலியின் 12பெட்டிகள் அம்ரோஹா அருகே தடம்புரண்டு விபத்திக்குள்ளானது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து டில்லிக்கு நேற்று சரக்கு ரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த ரயில் அம்ரோஹா அருகே சென்றபோது திடீரென தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் ரயிலின் 12 பெட்டிகள் தடம்புரண்டு தண்டாவளத்தில் இருந்து சரிந்தன. அருகே பொதுமக்கள் யாரும் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுவரை உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த ரயில்வே அதிகாரிகள் மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானதில் டில்லி-லக்னோ இடையிலான ரயில் பாதை தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. ரயிலின் பெட்டிகளில் இரண்டு பெட்டிகள் மட்டுமே வேதிப் பொருட்களை ஏற்றிச் சென்றதாகவும் மீதமுள்ள பெட்டிகள் காலியாக இருந்ததாகவும் வடக்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.