இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது இலங்கையின் தலைவர்களையும் வௌிவிவகார அமைச்சரையும் அவர் சந்தித்து உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.
அத்தோடு இரு நாடுகளுக்குமிடையிலான பல துறை விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் நாட்டிற்கு வருகை தரும் அமெரிக்க உயர்மட்ட அதிகாரி, மைக் பொம்பியோ என்பதும் குறிப்பிடத்தக்கது.