ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஜோக்கர் 2 படத்தின் முன்னோட்டம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹாலிவுட்டில் இயக்குநர் டூட் பிலிப்ஸ் இயக்கத்தில் ஜாக்குவன் பீனிக்ஸ் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபீஸ் வெற்றியை கொடுத்த திரைப்படம்தான் ‘ஜோக்கர். முதல் பாகமான ‘ஜோக்கர்’ சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் திரைக்கு வரவுள்ளது. இதற்காக உலகம் முழுக்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். ஜோக்கர் திரைப்படம் உலகளவில் $1 பில்லியனுக்கும் அதிகமான வசூல் செய்த முதல் ஆர்-ரேட்டர் திரைப்படம் ஆகும். கதையின் கதாநாயகனாக ஜாக்குவன் பீனிக்ஸ் மேடை நகைச்சுவையனாகும் முயற்சியில் தன் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு கலைஞன்.
அந்த கலைஞனை ஒரு கட்டத்தில் குடும்பமும் சமூகம் எப்படி மனநோயாளியாக மாற்றுகிறது என்பதை அட்டகாசமான திரைக்கதையால் சொன்னது இப்படம்.