நடராசா லோகதயாளன்.
சினாவின் 500 மில்லியன் ரூபா உதவி எனக் கத்துபவர்கள் அந்த 500 மில்லியனையும் எமது நாட்டிற்குள் பணமாக கொண்டு வந்து எமது விவசாயிகள், எமது உற்பத்தியாளர்களையும் ஊக்குவித்து இங்கே அரசி கொள்வனவு செய்து வழங்கியிருந்தால் அனைவரும் மகிழ்ந்திருப்போம் என கடற்றொழிலாளர் அமைப்பைச் சேர்ந்த அ.அன்னராசா தெரிவித்தார்.
கறுப்பு ஜீலை நிகழ்வின் 41வது ஆண்டு நினைவு கூறல் யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு உரையாற்றினார்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
நீதி அமைச்சர் இந்த நாட்டில் இடம்பெற்ற கறுப்பு ஜீலைக்கு வருத்தம் தெரிவிக்கின்றார். வருத்தம் வேண்டாம். நீதி அமைச்சரே எமக்கு நீதி வேண்டும்.
1983 இல் நடந்த சம்பவங்கள் உள்ளது. இவற்றிற்கும் இந்த நாட்டில் இன்றுவரை நீதி இல்லை. இதற்கு அப்பால் .2009 இல் உயிரோடு கையில் கொடுத்தவர்களிற்கும் நீதி இல்லை, அழிக்கப்பட்டதற்கும் நீதி இல்லை அவ்வாறானால் இவற்றிற்கு என்னதான் தீர்வு.
.
இன்று நாம் சத்தம் இன்றி, யுத்தம் இன்று அழிக்கப்படுகின்றோம். வாழ்விற்கும், போரிற்கும் பெரும் பங்காற்றிய கடல் வளம் இன்று திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது.
கடலில் அன்நியச் செலவானி என்னும் மாயை உருவாக்கி அபகரிக்கப்படுகின்றது.
சினாவின் உதவியை 500 மில்லியன் ரூபா உதவி எனக் கத்துபவர்கள் அந்த 500 மில்லியனையும் பணமாக கொண்டு வந்து எமது விவசாயிகள், எமது உற்பத்தியாளர்களையும் ஊக்குவித்து இங்கே அரசி கொள்வனவு செய்து வழங்கியிருந்தால் மகிழ்ந்திருப்போம்.
அதை விடுத்து அந்நியச் செலவானி என வெளிநாடுகளிற்காகவும் பல் தேசியக் கம்பனிகளிற்காகவும் எமது கடல் வளம் திட்டமிட்டு சத்தமின்றி யுத்தமின்றி அழிக்கப்படுகின்றது. இதன் மூலம் அரசும் எமது இருப்பை கேள்விக் குறியாக்கும்போது
எம்மவர்களும் அதற்கு உடந்தையாக உள்ளனர்.
இலங்கையிலேயே சட்டவிரோதமான தொழிலை அதிகமாக செய்யும் மாகாணமாக வடக்கு கிழக்கு மாகாணமே உள்ளது என்றார்.