நடராசா லோகதயாளன்
பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் இரண்டு தமிழ் பேசும் பொலிஸார் சந்தேக நபரை தாக்கிய குற்றச் சாட்டில் பணியிலிருந்து நீக்கம்
பருத்தித்துறையைச் சேர்ந்த சீனிவாசம் கிருபாகரன் எனபவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியுள்ளனர்.
இது தொடர்பில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், தாக்குதலுக்கு உள்ளான சந்தேக நபர் பருத்தித்துறை வைத்தியசாலையின் இலக்கம் 07 இலக்க விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதல் தொடர்பில் பருத்தித்துறை குற்றப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் வீரசுதன் குடிபோதையில் இருப்பதை உறுதி செய்த பின்னர், அந்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.
இத்தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்ட இரண்டாவது அதிகாரி திருச்செல்வம் சம்பவத்தன்று சம்பவ இடத்திலிருந்து வெளியேறினார்.
இவை தொடர்பான மேலதிக விசாரணைகளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் கங்கசந்துராய மேற்கொண்டு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் நீதிமன்றில் முற்படுத்தியபோது இருவரும் 50 ஆயிரம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இருந்தபோதும் இரு பொலிஸாரையும் காங்ககேசந்துறைக்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரினால் விசாரணை முடியும் வரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.