சமூக வலைத்தளத்தில் ஓரு மனிதநேயமுள்ள குமுறல்
இங்கே மக்களுக்கு அநீதி நடைபெற்றக்கொண்டிருக்கிறது , அது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் ஆக்கபூர்வமானதாக இல்லை .
எமது மக்கள் பிரதிநிதிகள் என்ன செய்கிறார்கள் ? மாகாணசபைத்தேர்தலுக்கு பிரேரணை போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இன்னும் ஒருதரப்பு பொது வேட்பாளர தேடிட்டு இருக்கு . இன்னும் ஒரு தரப்பு புறக்கணிக்க சொல்லி நோட்டிஸ் கொடுக்குது
மாகாணசபை இயங்கியபோது பிரதிநிதிகளாக உள்ளவந்த வைத்தியர்கள் தமது மக்களுக்கக செய்தது என்ன ? அவர்கள் தங்கள் வன்னி மாவட்ட வைத்திய சாலைகளில் ஒரு CT scan இயந்திரத்தை கூட பெற்றுக்கொடுக்க முடிந்திருக்கவில்லை ஆனால் அவர்களது சொந்த தனியார் வைத்திய சாலைகளில் CT scan வசதி வைத்திருக்கின்றனராம் இவை தான் மக்கள் பிரதிநிதிகளின் சீத்துவம்
மன்னார் , முல்லத்தீவு மாவட்ட வைத்திய சாலைகளில் இன்னும் Intern வசதி இல்லையாம் இன்ரேன் அனுமதிப்பதாயின் நிரந்தர வைத்திய நிபுணர்கள் நியமிக்கப்படவேண்டுமாம். தற்போது தற்காலிக வைத்திய நிபுணர்களே கடமையாற்றுவதாக அறிய முடிகிறது . உண்மையில் இந்த மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்களுக்கான தரமான தடை இன்றிய மருத்துவ வசதியை பெறுவதற்கான உரிமை மறுக்கப்பட்டிருக்கின்றார்கள்
இதையெல்லாம் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் இதுவரை கவனத்தில் எடுக்காதிருக்கின்றனர்
ஆனால் முள்ளிவாய்க்காலுக்கு விளக்கு கொழுத்த மட்டும் முண்டியடிக்கின்றனர்
அங்கே ஒரு குழந்தை தன் தாயை ஒரு சிலரின் கவனக்குறைவாலும் அசமந்தத்தினாலும் இழந்து பாலுக்காய் அழுதுகொண்டிருக்கிறது அதைப்பற்றி எந்த அரசியல்வாதி கவலைப்பட்டான் ?
இதுவரை எத்தனை பிரதிநிதிகள் அந்த குழந்தையின் வீட்டுக்கு சென்றனர் ?
உயிரின் விலை அவ்வளவு மலிந்துவிட்டதா? கொஞ்சம் கொஞ்சமாக குருதி வடிந்து கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்பட்ட அந்த இளம் தாய் எந்த உதவியுமின்றி மல சல கூடத்தில் குருதியை தண்ணீரில் கழுவி கழுவி கொண்டிருக்க இங்கே தாதியர்கள் கைத்தொலைபேசியில் கலந்து மகிழ்ந்து கொண்டிருந்திருக்கின்றனரே ,
இவர்கள் இன்னும் ஒரு தாயின் வலியில் பிறந்தவர்கள் என்பதை ஏன் மறந்து விட்டிருந்தனர் ? உங்களுக்கு விருப்பமில்லாத வேலையை ஏன் செய்கிறீர்கள்? இவ்வாறான ஆட்களை கண்டிக்கும் நவடிக்கை எடுக்காமல் பாதுகாப்பு கொடுக்கும் அதிகாரிகளும் கொடூரமானவர்களே
இலங்கையில் இன்னும் ஒரு அலட்சியக்கொலை இடம்பெறுவதை இதற்கு மக்கள் செய்யும் எதிர்வினை நிறுத்தவேண்டும் . நாளை உங்கள் வீட்டில் இது நடந்தபின் சித்தித்து பலனில்லை
இதன் பிறகும் இவற்றை எல்லாம் நியாயப்படுத்திக்கொண்டு நிர்வாகம் செய்யும் எவரும் காருண்யம் அற்ற காட்டுமிராண்டிகளே !