வங்காளதேச இடைக்கால அரசின் தலைவராக பொறுப்பேற்றுள்ள முகமது யூனுசுக்கு மேற்குவங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மம்தா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பேராசிரியர் முகமது யூனுசுக்கும் அவருடன் சேர்த்து வங்காளதேச அரசில் பொறுப்பேற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். வங்காளதேசத்துடனான இந்தியாவின் உறவு மேலும் வளரும் என நம்புகிறேன். வங்காளதேசம் வளர்ச்சி, அமைதி பெற வாழ்த்துகிறேன். மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகள். பிரச்சினை முடிவுக்கு வந்து விரைவில் அமைதி திரும்பும் என நம்புகிறேன். நமது அண்டை நாடு நன்றாக இருந்தால் நாமும் நன்றாக இருப்போம்’ இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
