ஊர்காவற்துறை கடற்பரப்பில் மாற்றுத்திறனாளியான ஆண் ஒருவரின் சடலம் நேற்று மதியம் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிசார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர், இரண்டாம் பண்ணை வீதியைச் சேர்ந்த பிரான்சிஸ் அன்ரனி (58) என பொலிசார் தெரிவித்தனர்.
தனித்து வாழ்ந்து வந்த இவர் இரவில் படகின் முகப்பில் உறங்குவதாக, பொலிசார் தெரிவித்தனர். அவ்வாறு உறக்கத்திலிருந்தபோது அவர் தவறி விழுந்திருக்கலாம் என, பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.