தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதியன்று அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் செல்ல இருப்பதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல்வரின் அமெரிக்க பயணம் இருக்கும் எனவும், அமெரிக்காவில் முக்கியமான பல நிறுவனங்களில் தொழிலதிபர்களை சந்திக்க இருப்பதாகவும், பல்வேறு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருப்பதாக அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.