தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக திகழ்ந்த நடிகர் பிரசாந்த், பின்னர் திரை துறையில் இருந்து சில ஆண்டுகளாக விலகி இருந்தார். தற்போது சினிமாத்துறைக்கு மீண்டும் வரவேற்பு கொடுத்துள்ளார். அவர் நடிப்பில் சென்ற வாரம் வெளியான அந்தகன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அந்தகன் படம் வெளியானத்தை அடுத்து, சுதந்திர தினத்தன்று அந்தகன் படத்தின் சிறப்பு பதாகை ஒன்றை அந்தகன் படக்குழு வெளியிட்டு வந்தது. இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்தகன் படத்தின் சிறப்பு பதாகையை நடிகர் பிரசாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
