இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தங்கலான். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள தங்கலான் திரைப்படம் வெளியாகியது. உலகம் முழுக்க வெளியாக இருக்கும் தங்கலான் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள தங்கலான் திரைப்படம் பண்டையக்கால கதையம்சம் கொண்டுள்ளது. இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு தெரிந்த மிகவும் கடினமாக உழைக்கும் நடிகர்களில் ஒருவரான சியான் விக்ரமின் தங்கலான் படத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
