‘ஆளுனரின் முடிவு சட்டவிரோதமானது” என கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
நில மோசடி வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர அம்மாநில ஆளுனர் தாவர்சந்த் கெலாட் அனுமதி வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது: ஆளுனரின் நடவடிக்கை சட்டவிரோதமானது. அரசியல்சானத்திற்கு எதிரானது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடுவேன். ராஜினாமா செய்யும் அளவுக்கு நான் தவறு செய்யவில்லை. ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட கர்நாடக அரசை கவிழ்க்க பா.ஜ.,வும் ம.ஜ.த.வும் சதி செய்கின்றன. முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் என்ற பேச்சுக்கே இடமில்லை. என் மீதும், குடும்பத்தினர் மீதும் தொடரப்பட்ட வழக்குகள், பிரச்னைகளை சட்டப்படி சந்திப்பேன். காங்கிரஸ் மேலிடம், அமைச்சரவை, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் அனைவரும் எனக்கு ஆதரவாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.