2017 ஆம் ஆண்டு `லை’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமாகினார் நடிகை மேகா ஆகாஷ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘பேட்ட’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மனதில் பதிந்தார். அதனைத்தொடர்ந்து, தனுஷுடன் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’, சிம்புவுடன் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து பிரபலமானார். கடைசியாக இவரது நடிப்பில், ‘சபாநாயகன், வடக்குப்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன்’ உள்ளிட்ட படங்கள் வெளியாகி வெற்றிப்பெற்றது. கடந்த 22-ந் தேதி சாய் விஷ்ணு என்பவருடன் மேகா ஆகாஷுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. இது தொடர்பான புகைப்படங்களை நடிகை மேகா பகிர்ந்து தனது ஆசை நிறைவேறியதாக இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி பதிவை பகிர்ந்திருந்தார். அதனைத்தொடர்ந்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேகா ஆகாஷை திருமணம் செய்யும் சாய் விஷ்ணு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி திருநாவுக்கரசரின் 2-வது மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், மேகா ஆகாஷ் சென்னையில் உள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு நேரில் சென்றார். குடும்பத்தினருடனும், வருங்கால கணவருடனும் சென்ற மேகா ஆகாஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார்.