நடிகர் தனுஷ் சமீபத்தில் ராயன் திரைப்படத்தை இயக்கி நடித்திருந்தார். இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தை தொடர்ந்து `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற திரைப்படத்தை இயக்கவுள்ளார். இது ஒரு ராம் காம் கதைக்களத்தில் உருவாகும் திரைப்படமாகும். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் முதல்காட்சி பாடலின் வரி விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தனர். இப்பாடலிற்கு கோல்டன் ஸ்பேர்ரோ என்ற தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இப்பாடலைக் குறித்து ஒரு பதிவேற்றம் வெளியாகியுள்ளது. இப்பாடலில் நடிகை பிரியங்கா மோகன் கேமியோ பெர்ஃபாமன்ஸ் செய்து இருக்கிறார் என தெரிவித்துள்ளனர். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் படக்குழு பதாகை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் பிரியங்கா மோகன் மடி சேரி லுக்கில் இருக்கிறார். இதனால் இப்பாடலின் மீது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இப்படத்தில் மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், அனிகா சுரேந்திரன், ரபியா காடூன் மற்றும் பவிஷ் முன்ன்ணி கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர், இப்படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளது.