மேற்குவங்கத்தில் பெண் மருத்துவர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வழிசெய்யும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் போராட்டம் நடைபெறும் நிலையில் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர்கள் பேரணியில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.
குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் மரண தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அடுத்த வாரம் கூடும் சட்டத்தொடரிலேயே மாநில சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், போராட்டத்தை கைவிட்டு, மருத்துவர்கள் மீண்டும் பணிக்கு திரும்பவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். போராடிவரும் மருத்துவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.