கடந்த 24ம் திகதி சனிக்கிழமை மொன்றியால் கொன்கோடியா பல்கலைக்கழக மண்டபத்தில் மொன்றியல் வாழ் மிருதங்க வித்துவானும் ‘இசைத் தமிழ் திருக்கோவில்’ இசை நிறுவனத்தின் குருவுமாகிய திரு மாயராஜா புவியழகன் அவர்களின் மாணவனான இசைச் செல்வன் சங்;கரன் சண்முகலிங்கத்தின் மிருதங்க அரங்கேற்றம் சிறப்பாக நடைபெற்றது.
இசைச் செல்வன் சங்கரன் சண்முகலிங்கம் அவர்கள், மொன்றியால் வர்த்தகப் பிரமுகரும் கனடா உதயன் பத்திரிகை நிறுவனத்தின் நீண்ட கால ஆதரவாளருமான ஶ்ரீ சண்முகலிங்கம் (புருட் ஹபீ) வர்த்தக நிறுவனம்) அவர்களின் புதல்வர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மிருதங்க அரங்கேற்றத்தை திரு பொன் சிவா வரதராஜன் தமிழிலும் செல்வி சிவகாமி சண்முகலிங்கம் ஆங்கிலத்திலும் தொகுத்து வழங்கினார்கள்.
அரங்கேற்றத்தின் பிரதம விருந்தினராக எஸ். நேசானந்தர் அவர்களும் சிறப்பு விருந்தினராக ‘உதயன்’ பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்களும் தமது துணைவியார்களுடன் ரொறன்ரோவிலிருந்து சென்று கலந்து கொண்டனர்..
அததுடன் மொன்றியால் திருமுருகன் ஆலயத்தின் பிரதமகுரு சிவஶ்ரீ ஶ்ரீ குருக்கள் அவர்களும் சிவஶ்ரீ பூர்ணானந்தக் குருக்கள் அவர்களும் வாழ்த்துரைகள் வழங்கினார்கள்.
அரங்கேற்றத்தின் பக்கவாத்திய கலைஞர்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கலையரசன் இராமநாதன்- வயலின், மயூரன் தனஞ்செயன்- வாய்ப்பாட்டு, நரேந்திரா தில்லையம்பலம்- கடம், மகிதீஸ் சிவனேந்திரன்- கஞ்சிரா, மற்றும் விசாலி சண்முகலிங்கம்-தம்புரா ஆகியோர் தங்கள் ஆற்றலையும் ஆதரவையும் பிரயோகித்து சங்கரன் அவர்களின் அரங்கேற்றம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு தங்கள் முழுத்திறமைகளையும் அர்ப்பணிப்புடன் வழங்கினார்கள். அத்துடன் மேற்படி அரங்கேற்றமான இன்னொரு வடிவில் நல்லதோரு சங்கீதக் கச்சேரி போன்ற தோன்றத்தையும் தரத்தையும் கொண்டதாகவும் நகர்ந்து சென்றது என்றால் அதுவும் மிகையாகாது.
அரங்கேற்றத்தின் பிரதம விருந்தினர் மற்றும் சிறப்பு விருந்தினர் இருவரது உரைகளிலும் அன்றைய அரங்கேற்றச் செல்வன் சங்கரனின் தந்தையாரின் பிறந்த ஊரான இணுவில் இசைக்கும் ஏனைய உயர்ந்த வாத்தியக்கருவிகளுக்கும் அதனை பயன்படுத்தி புகழ்பெற்றவர்களாக விளங்கிய வித்துவான்கள் பலரின் சொந்த மண் என்றும் அத்துடன் யாழ் பாடி பாடி பரிசு யாழ்ப்பாண மண்ணில் தோன்றியவர்களின் வாரிசுக்கள் இசைத்துறையில் சாதனைகளைப் படைப்பது என்பது அந்த மண்ணின் ‘வாசமும்’ வரப்பிரசாதம்’ என்ற உட்பொருளைக் கொண்டவையாக விளங்கியதை சபையோர் பாராட்டி மகிந்தார்கள்
இசைச் செல்வன் சங்;கரன் சண்முகலிங்கம் அவர்களின் மிருதங்க அரங்கேற்றத்திற்கு கனடா உதயன் ஆசிரிய பீடம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது.
Ganeshananthan- Local Journalism Initiative Reporter.-1