யாழ் மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகளுக்கு இருநாள் பயிற்சிப் பட்டறை!
ர்நயடவால டுயமெய நிறுவனம் வட மாகாணத்தில் சமூக மட்டங்களில் இணைந்த செயல்படுகின்ற அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் 40 பேருக்கு இருநாள் முழு நேர பயிற்சி நெறியினை புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு நாட்கள் நடாத்தியுள்ளது.
குறித்த பயிற்சிப் பட்டறை யாழ் பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில், அரச சார்பாற்ற நிறுவனங்களின் யாழ் மாவட்ட இணைப்பாளர் திரு. தயாபரன் தலைமையில் நடைபெற்றது.
முதல் நாள் செயலமர்வில் போதைப் பொருள் பாவனையினை எவ்வாறு தடுக்கலாம் என்பது தொடர்பில் ஆராயப்பட்டது.
கிராமிய மட்ட மற்றும் சிவில் சமூக, அரச சார்பற்ற நிறுவனங்களை போதைப் பொருள் தடுப்பு செயற்றிட்டத்தை வலுப்படுத்தும் நோக்கில் குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
இதன்போது, கிராமங்களில் போதைப் பொருள் பாவனை அதிகரிப்பதை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு சமூகத்துக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன் போது கலந்துரையாடப்பட்டன.
மேலும் சமூக மட்டங்களில் உள்ள அமைப்புக்கள் எவ்வாறான நடவடிக்கைகளை இதற்காக மேற்கொள்ள முடியும் என்பது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
இரண்டாம் நாள் செயலமர்வில் போதைப் பொருள் பாவனையினையினை குறைத்தல் மற்றும் பால்நிலை சமத்துவம் தொடர்பான வேலைத்திட்டங்களை யாழ் மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் வழிவகைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
இப் பயிற்சிப் பட்டறையில் ர்நயடவால டுயமெய நிறுவனத்தின் முகாமையாளர் சாமிக்க ஜெயசிங்க, வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் தே.பிறேம்ராஜ், தலைமைக் காரியாலய அலுவலர்களான லஹிரு, அனுபாமா, ஜனனி மற்றும் சரணி, மொழிபெயர்ப்பாளர் ஜெருசியா மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.