பு.கஜிந்தன்
தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்துடன் பிரித்தானிய தமிழ் தேசிய அமைப்புக்களினால் ஊர்தி எழுச்சிப்பயணம் ஒன்று 15-09-2024 அன்றையதினம் நடத்தப்பட்டது.
குறித்த ஊர்தி எழுச்சிப்பயணமானது, “நாமும் இணைந்தால் பலமே” என்ற தொனிப்பொருளில் தியாக தீபம் திலீபன் நோன்பிருந்த ஆரம்ப நாளான அன்று (15-09-2024) முன்னெடுக்கப்பட்டது.
இந்தநிலையில், தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு கோரும் குறித்த பயணமானது பிரித்தானியாவில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. இதேவேளை, “Roxeth recreation ground Ha2 8LF South Harrow ” இப்பயணம் நிறைவடைந்தது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரித்தானிய கிளையின் முக்கியஸ்தர் திரு.கேதீஸ்வரன் தலைமையில் இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.