பு.கஜிந்தன்
யாழ்ப்பாண. மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஹொக்கி அணியினரோடு காவேரி கலா மன்றம் இணைந்து, ஹொக்கி விளையாட்டு போட்டியை வைப்பதற்கூடாக சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான சமூகத்தை கட்டியெழுப்பி சூழலியல் சார்ந்த விடயங்களில் அதிகமான பங்களிப்புகளை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் ஹொக்கி போட்டியானது 17-09-2024 அன்று நடாத்தப்பட்டது.
குறிப்பாக தொழுநோயினால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக இருக்கின்றபடியினால் அவைகளில் இருந்து நாம் தற்காத்துக் கொள்வதற்கான விழிப்புணர்வை பெறுவதற்கான ஒரு ஊக்கத்தையும் இந்த செயற்பாடுகள் கொடுக்கும் என்று நம்பிக்கையுடன் ஆரம்பித்த KKM SHE Hockey tournament – 2024 இறுதிப்போட்டி யாழ்ப்பாண கல்லூரியின் மைதானத்தில் மிகவும் சிறப்பாக 17.09.2024 அன்று நடைபெற்றது.
இதில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வி.பி.எஸ்.டி.பத்திரன, யாழ்ப்பாண பல்கலைக்கழக உடற்கல்வி பணிப்பாளர் திரு கே.கணேஷானந்தன், சுற்றுச்சூழல் அதிகார சபை அதிகாரி, காவேரி கலா மன்றத்தின் நிர்வாக உத்தியோகத்தர் இன்பராஜ் சஹானா, யாழ்ப்பாண கல்லூரி உடற்கல்வி இயக்குனர் திரு. குகன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டார்கள்.
ஆண் பெண் இருபாலர்களின் இறுதிப்போட்டியும் மிக சிறப்பாக நடைபெற்றது. பெண்கள் அணியில் பல்கலைக்கழகம் முதலாவது இடத்தையும் பண்டத்ரி யுனிற்றட் இரண்டாம் இடத்தினையும், யாழ்ப்பாண கல்லூரி பழைய மாணவர்கள் மூன்றாம் இடத்தினையும், ஆண்கள் அணியில் முதலாம் இடத்தினை யாழ்ப்பாண பல்கலை கழகமும், இரண்டாம் இடத்தில் யாழ்ப்பாண கல்லூரி பழைய மாணவர்களும் மூன்றாம் இடத்தினை பழைய மாணவர் crimson னும் பெற்றுக்கொண்டனர்.