தமிழ்நாட்டின் முதலைமைச்சராகவும், கவிஞராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்த முதமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு தமிழ்நாட்டில் கவிதைத்தளத்தில் சிறப்பாக இயங்கி வரும் 100 கவிஞர்களை தேர்வு செய்து சென்னை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கமும் , கவிதை உறவு மாத இதழும் இணைந்து கலைஞர் விருது வழங்கிப்பாராட்டியது
23-09 – 2024 அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள ராணி சீதை மற்றத்தில் . விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் செவாலியே டாக்டர் வி.ஜி.சந்தோசம். தலைமையில் நடைபெற்ற விழாவில் . தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்த்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கவிஞர்களுக்கு விருதுகள் வழங்கிச் சிறப்பித்தார் . இவ்விழாவில் திருச்சிராப்பள்ளியிலிருந்து கடந்த 27 ஆண்டுகளாக இலக்கியப் பணியும் , ஐந்து கவிதை நூல்களையும் வெளியிட்டுள்ள இனிய நந்தவனம் மாத சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் நந்தவனம் சந்திரசேகரனுக்கும் கலைஞர் விருது வழங்கப்பட்டுள்ளது
விழாவில் கவிதை உறவு மாத இதழின் ஆசிரியர் ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குநர்.
வள்ளல்நேசன் டாட்டார் ஜெய ராஜமூர்த்தி, கவிச்சுடர் கவிப்பித்தன் ஆகியோர் சிறப்புரையாற்றினர் தமிழ்நாட்டு அரசியல், சினிமா, இலக்கியம் என் மூன்று துறைகளிலும் சிறந்து விளங்கிய கலைஞர் காலத்தில் நாமும் வாழ்ந்திருக்கிறோம் என்று விருது பெற்ற அனைத்து கவிஞர்களும் பெருமைப்பட்டனர்.