இயக்குனர் செல்அம் இயக்கத்தில் ‘மஞ்சள் வீரன்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமானார். சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்றமும் வெளியாகி வைரலானது. இந்நிலையில், ‘மஞ்சள் வீரன்’ படத்தில் இருந்து படத்தின் கதாநாயகனும், பிரபல டிடிஎப் வாசன் நீக்கப்பட்டுள்ளார். இதனை படத்தின் இயக்குனர் செல்அம் அறிவித்துள்ளார். இது குறித்து இயக்குனர் கூறுகையில், ‘டிடிஎப் வாசன் பல வேலைகளில் மும்மரமாக இருப்பதால் இந்த திரைப்படத்திற்கு அவரால் நேரம் செலவிட முடியவில்லை. இதனால் வேறொரு கதாநாயகனை தேர்வு செய்து படப்பிடிபை தொடர உள்ளோம். டிடிஎப் வாசனுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையும் கிடையாது. புதிய கதாநாயன் யார் என்பது குறித்து வரும் 15-ம் தேதி அறிவிக்கப்படும்’ என்றார்.
