பு.கஜிந்தன்
வடக்கிலங்கையின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்திலும் ஏனைய அரசியல் செயற்பாடுகளிலும் தமிழ்த்தேசிய செயலாற்றுகையை முன்னிறுத்தி, மக்கள் பிரதிநிதிகளாக தெரியப்படுபவர்களிடத்தில் “மாற்றம்” வேண்டும் எனும் நோக்கில் கலந்துரையாடல் ஒன்று 2ம் திகதி புதன்கிழமையன்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள . தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது.
தமிழ்த்தேசியத்தின் மீது ஆர்வமுடைய, நேரடி அரசியலில் ஈடுபடாத மற்றும் வருகின்ற தேர்தலில் ஒரு மாற்றத்தை விரும்புகின்ற பல்வேறு தரப்பிலும் உள்ள ஆர்வலர்களால் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளின் கடந்தகால செயற்பாடுள் என்ன, தேசிய கட்சிகளின் செயற்பாடுகள் என்ன, அற்றின் தற்போதைய நிலைப்பாடுகள் என்ன, இளைஞர்கள் ஏன் அரசியலுக்கு வரவேண்டும், தமிழ் தேசியம் குறித்து நிலைப்பாடு என்ன, பெண்களுக்கான ஆசன ஒதுக்கீடு போன்ற பல விடயங்கள் அங்கு கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், சமூக ஆர்வலர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள், இளைஞர்கள் யுவதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.