பு.கஜிந்தன்
யாழ்ப்பாணத்தில் பிறந்து 45 நாட்களேயான பெண் குழந்தை ஒன்று நேற்றையதினம் உயிரிழந்துள்ளது. தவசிகுளம் – கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த துசியந்தன் தனுசியா என்ற குழந்தையை இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
கடந்த 16ஆம் திகதி குழந்தைக்கு உடல் சுகயீனம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெற்றோர் அன்றையதினம் 4:00 மணிக்கு சாவகச்சேரி ஆதர வைத்தியசாலைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக குழந்தை யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் நேற்று முற்பகல் 11.00 மணியளவில் சேர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குறித்த குழந்தை 17-10-2024 மாலை பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். குழந்தையின் இறப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாத நிலையில் உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.