இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவான ‘தி கோட் திரைப்படம், மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 5-ந் தேதி வெளியானது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படத்தில் விஜய்யுடன் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.இந்த படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ரூ. 450 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. இந்த நிலையில் கோட் படத்திற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தொலைபேசியில் அழைத்து கோட் படத்தை முழு மனதுடன் பாராட்டியதற்காக நன்றி தலைவா என்றென்றும் நன்றியுடன், அன்பை உங்களுக்கு அனுப்புகிறேன். என தெரிவித்துள்ளார்.