பு.கஜிந்தன்
புத்தசாசன சமய விவகார மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் நாடளாவிய ரீதியில் உள்ள கலாசார மத்திய நிலையங்களுக்கிடையில் நாடத்தபடும் பிரதீபா விருதுக்கான போட்டி 19-10-2024 அன்றையதினம் அளவெட்டி அருனோதயா கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.
அந்தப்போட்டியில் தென்மராட்சி கலாசார மத்திய நிலைய மாணவர்கள் மாகாண மட்டத்தில் வெற்றி பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
அந்தவகையில் கிராமிய குழுப் பாடல் போட்டியில் ஆரம்ப பிரிவு வரணி மாணவர்கள்-முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
அதேவேளை மிருதங்கப் போட்டியில் வரணி மாணவன் பங்கு பற்றி முதலாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளார்
அத்துடன் கிராமிய குழு பாடல் போட்டியில் கனிஸ்ட பிரிவு -வரணி மாணவர்கள் -இரண்டாம் இடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
தென்மராட்சி கலாசார மத்திய நிலைய நிலையத்தின் கீழ் உள்ள கைதடி கிராமிய நிலையம் தில்லானா குழு நடனம் முதலாம் இடத்தையும் வாள் நடனம் இரண்டாம் இடத்தையும் பெற்று அனைத்து போட்டிகளும் தேசிய மட்டத்துக்கு தெரிவாகியுள்ளது.
இப்போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்களுக்கும் இதனை நெறிப்படுத்திய ஆசிரியர்களுக்கும் மாணவர்களை ஊக்கப்படுத்திய பெற்றோருக்கும்
நிலைய பொறுப்பதிகாரியும் உத்தியோகத்தர்களும் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.