ஆனமடுவ பொலிஸின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி வாகன விபத்தொன்றில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நள்ளிரவு மற்றுமொரு பொலிஸ் அதிகாரியுடன் குறித்த பொறுப்பதிகாரி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ள நிலையில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி ஆனமடுவ மணிக்கூட்டு கோபுரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய மாடுகளை கடத்திய வாகனமொன்றை பின்தொடர்ந்து சென்ற நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆனமடுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
நிகவெரடிய பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய பொலிஸ் அதிகாரியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மற்றுமொரு பொலிஸ் அதிகாரி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்