அமெரிக்க அதிபர் தேர்தலில் துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் வெற்றி பெற்றிருப்பதற்கு ஆந்திரா முதல்-அமைச்சர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்சுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது இந்த வெற்றி, ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட உஷா வான்ஸ், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்றும் முதல் தெலுங்கு பாரம்பரிய பெண் என்ற வரலாற்று தருணத்துக்கு வழிவகுத்துள்ளது. உலகெங்கிலும் உள்ள தெலுங்கு சமூகத்தினர் அனைவருக்கும் பெருமை சேர்க்கும் தருணம் இது. ஜே.டி.வான்ஸ் – உஷா வான்சை ஆந்திராவுக்கு வருமாறு அழைக்கும் வாய்ப்பினை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்” என்று சந்திரபாபு நாயுடு பதிவிட்டுள்ளார்.