தம்பி ராமையா கதை, வசனம் எழுதி அவரது மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள திரைப்படம் ‘ராஜாகிளி’. இந்த படத்தில் சமுத்திரக்கனி, தம்பி ராமையா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், பழ கருப்பையா, இளவரசு, ஆடுகளம் நரேன், ரேஷ்மா, டெப்பா, ஜி.பி.முத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு தம்பி ராமையா இசையமைத்துள்ளார்.கோபிநாத், கேதார்நாத் இருவரும் ஒளிப்பதிவு செய்துள்ளனர். சுதர்சன் ஆர் படத்தொகுப்பு செய்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. .50-வயதைக் கடந்த தொழிலதிபர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது.வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்த நிலையில், நவம்பர் 29ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.