கனடா வாழ் கசியும் இதயம் படைத்த நல்லுங்களின் நிதிப்பங்களிப்போடு நிறைவேற்றப்பட்டுள்ள பிரமாண்டமான மனித நேயப் பணி
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும ‘குமரன் விளையாட்டுக் கழகம்’ எடுத்த தீவிர முயற்சியினால் தமிழர் தாயகத்தில் வீடற்றவர்களாக இருந்த வசதியற்றவர்களுக்காக கட்டிக் கொடுக்கப்பெற்ற 35 வீடுகள் அனைத்து பயனாளிகளிடமும் கையளிக்கப்பெற்றுள்ளன. மேற்படி வீடுகள் கையளிக்கும் வைபவங்களில் கனடாவிலிருந்து தமிழர் தாயகத்திற்குச் சென்ற மனித நேயம் கொண்ட அன்புள்ளங்களின் பிரதிநிதிகள் உவகையுடன் பங்குபற்றி கனடா திரும்பியுள்ளனர்.
கனடா வாழ் கசியும் இதயம் படைத்த நல்லுங்களின் நிதிப்பங்களிப்போடு நிறைவேற்றப்பட்டுள்ள மனித நேயப் பணி தொடர்பாக எவ்வித விளம்பரங்களும் மேற்கொள்ளாமல் அமைதியாக இருந்து இந்த அரும்பணியை பூர்த்தி செய்து விட்டதன் பின்னரேயே இந்த விடயத்தை கனடாவில் இயங்கும் பத்திரிகை நிறுவனங்களுக்கும் அதன் பிரதம ஆசிரியர்களுக்கும் அறியத் தந்த குமரன் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகிகளுக்கு கனடா உதயன் ஆசிரிய பீடத்தினர் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.
பயனாளிகளுக்கு கட்டிக் கொடுக்கப்பெற்ற வீடுகளைப் பெற்ற பயனாளிகளின் பெயர்களும் அவர்கள் வாழும் தமிழ் தாயகப் பகுதியும் மற்றும் கனடாவிலிருந்து இந்த மனித நேயப்பணிக்கு நிதி அன்பளிப்புக்களை வழங்கியவர்களின் பெயர்களும் கீழே காணப்படுகின்றன.
குமரன் விளையாட்டுக்கழகம் கனடா முதலாவது வீடு திரு திருமதி இராசரத்தினம் சிவபாக்கியம் ஞாபகார்த்தமாக கட்டப்பட்ட வீடு.
நிதி அனுசரணை வழங்கிய இராசரத்தினம் பாலகிருணன் (சின்ராசு )அவர்களுக்கு
நிர்வாகத்தின் சார்பில் நன்றிகள்
குமரன் விளையாட்டுக் கழகம்- கனடா கிளையின் ஒருங்கமைப்பில் திரு,திருமதி நடராசா செல்வராணி ஞாபகார்த்தமாக நடராசா உமாகாந்த் அணுசரனையில் கட்டப்பட்ட இரண்டாவது வீடு
குமரன் விளையாட்டுக்கழகம் கனடா மூன்றாவது வீடு சற்குருநாதன் ஞாபகார்த்தமாக நிதி அனுசரணை வழங்கிய கண்ணன் சற்குருநாதன் அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் நன்றிகள்
தர்மபுரத்தில் வசிக்கும் ஜோசப் ஜஸ்டின் குடும்பத்திற்கு திருமதி துரைராஜா புவனேஸ்வரியின் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த வீட்டுத்திட்டத்தின் நான்காவது வீடு நிதி அனுசரணை வழங்கிய *திரு துரைராஜா சிறீதரன் அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பில் நன்றிகள்
வீடு அமைப்பு திட்டத்தின் ஐந்தாவது வீடு மாங்குளத்தைச் சேர்ந்த கார்த்திமுத்து மகேந்திரா குடும்பத்திற்கு திருதிருமதி சிவகுரு தையல்நாயகி ஞாபகார்த்தமாக அன்பளிப்பு கலாறஞ்ஜினி சிறீதரன் நிர்வாகத்தின் சார்பில்
வீடு அமைப்பு திட்டத்தில் ஏழாவது வீடு கோண்டாவிலில் வசிக்கும் விஐயமலர் அவர்களுக்கு திரு சின்னத்துரை சண்முகராசா ஞாபகார்த்தமாக அன்பளிப்பு சண்முகராசா சுதன்
வீடு அமைப்பு திட்டத்தில் எட்டாவது வீடு சுதுமலையில் வசிக்கும்
திரு ஜெகநாதன்இரஞ்சித்குமார் அவர்களுக்கு திரு திருமதி இரத்தினசிங்கம் நல்லமுத்து * ஞாபகார்த்தமாக அன்பளிப்பு *இ.யோகராசா , இ.வசந்தன்
வீடு அமைப்பு திட்டத்தில் எட்டாவது வீடு சுதுமலையில் வசிக்கும்
திரு ஜெகநாதன்இரஞ்சித்குமார் அவர்களுக்கு திரு திருமதி இரத்தினசிங்கம் நல்லமுத்து * ஞாபகார்த்தமாக அன்பளிப்பு *இ.யோகராசா , இ.வசந்தன்
கனடா
வீடு அமைப்பு திட்டத்தில் ஒன்பதாவது வீடு விசுவமடு கிளிநொச்சியை சேர்ந்த தர்மகுலசிங்கம் கோபினா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
திரு தர்மகுலசிங்கம் பாஸ்கரன் ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு பத்மநாதன் தேவபாலன்
வீடு அமைப்பு திட்டத்தில் பத்தாவது வீடு பொன்னாலை தெற்கு சுழிபுரத்தில் வசிக்கும் வசந்தராஜா ரஞ்சிதன் அவர்களுக்கு திரு பஞ்சலிங்கம் மயூரன் ஞாபகார்த்தமாக வழங்கப்பட்டது
அன்பளிப்பு பஞ்சலிங்கம் நிர்மலாதேவி குடும்பம்
வீடு அமைப்பு திட்டத்தின் 11 வது வீடு மயில்வாகனபுறம் பிரம்மந்தாறு தர்மபுரத்தில் வசிக்கும் திரு இராசேந்திரன் கலையரசன் அவர்களுக்கு
திரு செல்லத்துரை ,
திரு திருமதி இரத்தினம் பரமேஸ்வரி ஞாபகார்த்தமாக அன்பளிப்பு செல்லத்துரை குடும்பம்
இரத்தினம் குடும்பம்
குமரன் விளையாட்டு கழகம் கனடா
வீடு அமைப்பு திட்டத்தின் 12வது வீடு
பொன்னாலை தெற்கு சுழிபுரம் பகுதியில் வசித்துவரும் நவரத்தினசாமி அஜந்தகுமார் அவர்களுக்கு அமரர் சுப்பையா சுந்தரலிங்கம் ஞாபகார்த்தமாக அன்பளிப்பு சுந்தரலிங்கம் சதீஸ்
வீடு அமைப்பு திட்டத்தின் 13வது வீடு
இணுவிலில் வசிக்கும் நடராசா சிவகுமார் அவர்களுக்கு
அமரர் செல்லையா கந்தையா ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு கந்தையா பஞ்சலிங்கம்
வீடு அமைப்பு திட்டத்தின் 14வது வீடு வட்டுக்கோட்டை வடக்கு சித்தங்கேணியில் வாழ்ந்துவரும் செல்லையா சரஸ்வதி அவர்களுக்கு அமரர்கள் இராசையா-பரமேஸ்வரி ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு இராசையா சீறீகாந்தன்
குமரன் விளையாட்டுக் கழகம் -கனடா
எமது வீடமைப்புத் திட்டத்தின் 15,16,17,18,19 ஆவது வீடுகள் மிருசுவில் பகுதியில் விழிப்புணர்வு அற்ற ஐந்து குடும்பங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது
ஐந்து வீடுகளும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
15 வது வீடு
பாஸ்கரன் – சுதர்ஷினி ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு பாஸ்கரன் குடும்பம்
குமரன் விளையாட்டுக் கழகம் -கனடா
எமது வீடமைப்புத் திட்டத்தின்.
16 வது வீடு
பாலசிங்கம் கண்மனி ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு பாலசிங்கம் குடும்பம்
குமரன் விளையாட்டுக் கழகம் -கனடா
எமது வீடமைப்புத் திட்டத்தின்
17 வது வீடு
தேவிகா ஜெயக்குமார் ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு ஜெயக்குமார் செல்வரத்தினம்
குமரன் விளையாட்டுக் கழகம் -கனடா
எமது வீடமைப்புத் திட்டத்தின்
18 வது வீடு
அன்பளிப்பு கருனாநிதி ரவீந்திரன் , தில்லைநாயகம் ரூபகுமார்
எமது வீடமைப்புத் திட்டத்தின் 15,16,17,18,19 ஆவது வீடுகள் மிருசுவில் பகுதியில் விழிப்புணர்வு அற்ற ஐந்து குடும்பங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது
ஐந்து வீடுகளும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
19 வது வீடு
அருளம்பலம்- இரத்தினம்மா ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு பிள்ளைகள்
வீடு அமைப்பு திட்டத்தின் 20வது வீடு
மாங்குளம் பகுதியில்
அமரர்கள் மகாதேவா – சோமசுந்தரம் ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு சிவா – இரஞ்சன் ( கொக்குவில் )
வீடு அமைப்பு திட்டத்தின் 21வது வீடு
நெடுங்கேனி பகுதியில்
அமரர்கள்
வீரசிங்கம் செல்லம்மா-ரமேஷ் ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு வீரசிங்கம் வினாயகர்
குமரன் விளையாட்டுக் கழகம் -கனடா
22 வது வீடு
பஞ்சரத்தினம் மகேஸ்வரி ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு பிள்ளைகள்
குமரன் விளையாட்டுக் கழகம் -கனடா
எமது வீடமைப்புத் திட்டத்தின் 22,23,24,25,26 ஆவது வீடுகள் அம்பாறை மாவட்டம் காயத்திரிபுரம் பகுதியில் ஐந்து குடும்பங்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது
ஐந்து வீடுகளும் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
24 வது வீடு
பொன்னையா செல்வரட்னம் மற்றும் இரத்தினம் கனகம்மா ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு சுகுமார் – சுமதி
குமரன் விளையாட்டுக் கழகம் -கனடா
25 வது வீடு
சீவரத்தினம் துரையம்மா ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு கேதீஸ் சீவரத்தினம்
குமரன் விளையாட்டுக் கழகம் -கனடா
26 வது வீடு
அன்பகம் 2
அன்பளிப்பு
Royal Property நிராகுலன்
குமரன் விளையாட்டுக் கழகம் கனடா
வீடு அமைப்பு திட்டத்தின் 27 வது வீடு
ஓமந்தை இளமருதங்குளம் பகுதியில்
வழங்கப்பட்டது.
கனகராசா அரியரட்னம் ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு அரியரட்னம் தெய்வேந்திரம்
வீடு அமைப்புத் திட்டத்தின் 28வது வீடு
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு மூங்கில்ஆறு பகுதியில் வசித்துவரும் அலோசியஸ்பிள்ளை அவர்களுக்கு அமரர்களான திரு,திருமதி வீரசிங்கம் ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு வீரசிங்கம் சந்திரன்
வீடு அமைப்புத் திட்டத்தின் 29 வீடு
கிளிநொச்சி பகுதியில் வசித்துவரும் நிர்யுயன் அவர்களுக்கு அமரர்களான திரு,திருமதி இராசையா-கண்மனி ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு இராசையா மகேஸ்வரன்
வீடு அமைப்புத் திட்டத்தின் 30 வீடு
கிளிநொச்சி பகுதியில் வசித்துவரும் …அவர்களுக்கு அமரத்துவமடைந்த கிருஸ்னபிள்ளை நடராசா ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு நடராசா ஜெயகாந்
வீடு அமைப்புத் திட்டத்தின் 31 வது வீடு
கோண்டாவில் பகுதியில் வசித்துவரும் சூரியகுமாரன் சங்கீதா அவர்களுக்கு அமரத்துவமடைந்த சுலோசனாதேவி மகாலிங்கம் ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு மாகலிங்கம் – பிள்ளைகள்
வீடு அமைப்புத் திட்டத்தின் 32 ஆவது வீடு அக்ராயன்குளம் கிளிநொச்சியில் வசித்துவரும் கதிரன் தேவராசா அவர்களுக்கு அமரத்துவமடைந்த பீட்டர்போல் ஞாபகார்த்தமாக அன்பளிப்பு Rexy குடும்பம்
வீடமைப்புத் திட்டத்தின் 33 வது வீடு அக்ராயன்குளம் கிளிநொச்சியில் வசித்துவரும் ஞானராசா ராஜ்குமார் குடும்பத்திற்கு அமரத்துவமடைந்த கந்தையா தவனேந்திரம் ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு குடும்பத்தினர்
வீடு அமைப்புத் திட்டத்தின் 34-வது வீடு அக்கராயன்குளம் கிளிநொச்சி பகுதியில் வசித்துவரும் விக்னேஸ்வரன் குடும்பத்திற்கு அமரத்துவமடைந்த கந்தசாமி அன்னபூசனி அம்மா ஞாபகார்த்தமாக
அன்பளிப்பு பிள்ளைகள்
வீடு அமைப்புத் திட்டத்தின் 35 வது வீடு புதுகுடியிருப்பு இரண்டாம் வட்டாரத்தில் வசித்து வரும் திரு திருமதி ஜெயராச குடும்பத்திற்கு அமரத்துவமடைந்த திருமதி ஞானம்மா துரையப்பா ஞாபகார்த்தமாக அன்பளிப்பு
சவுத் ஏசியன் சூப்பர் மார்க்கெட்
மேற்படி வீட்டுத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டது தொடர்பான பத்திரிகையாளர்களுக்கு அறிவிக்கும் நிகழ்வு கடந்த 15-11-2024 அன்று கனடா ஸ்காபுறோ நகரில் நடைபெற்றது. நிகழ்வை திரு தேவா சபாபதி தொகுத்து வழங்கினார்