யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் ‘கஜானா’. மேலும் இப்படத்தில் சாந்தினி, வேலு பிரபாகரன், மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். போர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் கதை, திரைக்கதையை எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். கோபி துரைசாமி, வினோத் ஜே.பி ஒளிப்பதிவு செய்துள்ளனர். கே.எம்.ரியாஸ் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தில் அழிந்துப்போன ஆதி உயிரினமான யாளி அனிமேஷன் செய்யப்பட்டு கொண்டுவரப்பட்டுள்ளது. 700 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட பிரம்மாண்ட கஜானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்களின் சாகசப் பயத்தையும் அந்த கஜனாவை காப்பாற்றும் பேய்களின் அட்டகாசங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களுடன், திகில் மற்றும் நகைச்சுவையோடு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி உள்ளது. இந்த முன்னோட்டத்தை நடிகை வேதிகா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.