தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நடிகர் மாதவன், தற்போது தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் பாலிவுட் சினிமாவிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். அதன்படி, சமீபத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான ‘சைத்தான்’ படத்தில் மாதவன் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக பாலிவுட்டில், அனன்யா பாண்டே, அக்சய் குமார் நடிக்கும் படத்திலும் மாதவன் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் கரன் ஜோகர் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் மாதவன் நடிக்க இருக்கிறார். இப்படத்தில், பாலிவுட்டில் மிகப்பெரிய ஹிட் அடித்த ‘தங்கல்’ படத்தில் கீதா போகத்தாக நடித்திருந்த பாத்திமா சனா ஷேக் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இப்படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாகவும் ‘ஆப் ஜெய்சா கோய்’ என பெயரிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு நடிகர் மாதவன் மற்றும் பாத்திமா சனா ஷேக் ஒன்றாக நடித்ததில்லை என்பதால் இருவரையும் ஒன்றாக திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.