உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:- கொரோனா தொற்று நோய்க் காரணமாகத் தற்காலிகமாக மூடி வைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் 10-11-2020 செவ்வாய்க்கிழமை முதல் செயல்படத் தொடங்கும். வழக்கம்போல காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அனைவரும் முகக் கவசம் அணிந்தும் மற்றும் தொற்று நோய் தடுப்பு முறைகளைக் கடைப்பிடித்தும் கலந்துகொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
அன்புள்ள,
(பழ. நெடுமாறன்)
தலைவர்.