யாழ்.கொழும்புத்துறை – எழிலுார் பகுதியில் இன்று (10) அதிகாலை திடீரென கடல் நீர் புகுந்தமையால் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் அங்குள்ள பலருடைய வீடுகளுக்குள்ளும் கடல்நீர் உட்புகுந்துள்ளது.
இந்நிலையில் யாழ்.மாநகரசபை பிரதி முதல்வர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டிருந்தார்.
தங்கள் வீடுகளில் தங்க முடியாத அளவிற்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களைக் கவனிக்கும் திணைக்களங்கள் மூலமாக உதவிகளைப் பெற்றுக்கொடுக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன்