நடிகர் தனுஷ் இயக்கத்தில் வெளியான பவர் பாண்டி, ராயன் போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. அடுத்தது இவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ . இதைத்தொடர்ந்து இட்லி கடை எனும் திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் படமானது அடுத்த ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் குபேரா எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார் தனுஷ். மேலும் தேரே இஷ்க் மெய்ன் என்ற பாலிவுட் படத்தில் கமிட்டாகியுள்ளார். அடுத்தது அமரன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் தனுஷ். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது. தனுஷ், போர் தொழில் படத்தின் இயக்குனர் விக்னேஷ் ராஜாவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தினை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும் இப்படம் கிட்டத்தட்ட 150 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.