தஜிகிஸ்தானில் அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தஜிகிஸ்தானில் இந்திய நேரப்படி அதிகாலை 5.44 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலத்துக்கடியில் சுமார் 130 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 4.5 அலகுகளாகப் பதிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும், இந்த நிலநடுக்கத்தால் பொருள் சேதமோ, உயிர்சேதமோ எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.