இலங்கையில் மேல் மாகாணத்திலிருந்து வௌியேறும் மற்றும் மேல் மாகாணத்திற்குள் பிரவேசிக்கும் அனைத்து பேருந்து சேவைகளும் இன்று முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், எதிர்வரும் 15ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இடைநிறுத்தம் தொடரும் என இராணுவத் தளபதி சசேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்று இரவு 10 மணிமுதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மேல்மாகாணத்திற்கு உள்நுழைவதற்கு ரயில்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், மேல்மாகாணத்தில் இருந்து வெளியேறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, பிற்பகல் வேளைகளில் மேல்மாகாணத்தில் இருந்து வெளிச்செல்லும் ரயில் சேவைகள் அளுத்கம, அம்பேபுஸ்ஸ, கொச்சிக்கடை மற்றும் அவிசாவளை வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது