ஸ்காபுறோவில் இயங்கிவரும் Remax Ace Realty Inc Brokerage நிறுவனம் நடத்திய பத்தாவது ஆண்டு விற்பனையாளர்கள் விருதுகள் வழங்கும் வைபவம்
Remax Ace Realty Inc Brokerage, operating in Toronto, hosted it’s 10th A Annual Awards Gala on Saturday, 11th, Jan. 2025. Many Agents and Brokers were honored according to their Sales Achievements in 2024
ஸ்காபுறோவில் கடந்த பத்து வருடங்களாக வெற்றிகரமாக இயங்கிவரும் Remax Ace Realty Inc Brokerage நிறுவனம் தனது பத்தாவது ஆண்டு விற்பனையாளர்கள் விருதுகள் வழங்கும் வைபவத்தை கடந்த 11-01-2025 அன்று மாலை ஸ்காபுறோவில் நடத்தியது.
ஐந்து பங்காளர்கள் இணைந்து ஆரம்பித்த இந்த நிறுவனம் தொடர்ந்து பத்தாண்டுகள் நூற்றுக்கணக்கான வீடு விற்பனை முகவர்களை உள்ளடக்கி விற்பனையில் அவர்கள் சாதனைகளை நிலைநாட்டிவருவதையும் அறியக்கூடியதாக உள்ளது.
அவர்களுள். பல இனங்களைச் சார்ந்தவர்களாகவும் வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றவர்களாகவும் விளங்குவது இங்கு குறிப்பிடத்தக்கது.
அன்றைய விற்பனை விருதுகள் வழங்கும் விழாவிற்கு ஒன்றாரியோ மாகாண வீடமைப்பு வசதிகள் அமைச்சின் இணை அமைச்சரும் மாகாண சபை உறுப்பினருமான விஜேய் தணிகாசலம் அவர்கள் பிரதம விருந்தினராகக் அழைக்கப்பெற்றிருந்தார்.
அங்கு பல விற்பனை முகவர்கள் தங்கள் விற்பனையின் எண்ணிக்கை மற்றும் இதர முயற்சிகள் ஆகிய சாதனைகளுக்காக அதற்கேற்ப விருதுகளைப் பெற்றுக்கொண்டார்கள்.
அங்கு தத்தமது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரோடும் கலந்து சிறப்பித்து விழாவை வெற்றிகரமானதொன்றாக விளங்கச் செய்த விற்பனை முகவர்கள் அனைவருக்கும் நிறுவனத்தின் ப ங்காளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்கள்.