வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தின் கர்தல்காயா ரிசார்ட்டில் உள்ள ஓட்டலில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 32 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். ஓட்டல் முழுவதும் புகை சூழ்ந்திருந்ததால், தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து விருந்திர்னர்களை கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் அந்த ஓட்டலில் 234 விருந்தினர்கள் தங்கியிருந்தன்ர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கையாக ரிசார்ட்டில் உள்ள மற்ற ஓட்டல்களில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டன.