இளவாலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில்; ‘அனைத்துலக தமிழர் பேரவை’யின் தலைவரும் கனடா வாழ் அரசியல் செயற்பாட்டாளருமான நிமால் விநாயகமூர்த்தி தெரிவிப்பு
“எமது தாயக மண் பல ஆண்டு கால யுத்தத்தின் காரணமாக வடுக்களும் சோகமும் வறுமையும் நிறைந்த ஒரு பிரதேசமாக காணப்படுகின்றது எனவே எங்கள் பிறந்த மண்ணை ஒரு வளமிக்க தேசமாக உருவாக்க புலம் பெயர் உறவுகள் பலர் ஆர்வத்துடன் செயற்படுகின்றார்கள். அதற்காக பலர் திட்டங்களைத் தயாரித்துள்ளார்கள். இந்த வகையில் யாழ்ப்பாணம் இளவாலைக் கிராமத்தில் இயங்கிவரும் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் உறுப்பினர்கள் மக்கள் சேவையில் முன்னின்று பல பணிகளை ஆற்றிவருகின்றார்கள். அவர்கள் ஏற்பாடு செய்த இவ்வருடத்தின் பொங்கல் விழாவில் நானும் ஒருவனாக் கலந்து கொண்டு உங்கள் மத்தியில் உரையாற்றுவதை ஒரு பெருங்கடமையாகக் கருதுகின்றேன்”
இளவாலையில் நடைபெற்ற பொங்கல் விழாவில்; ‘அனைத்துலக தமிழர் பேரவை’யின் தலைவரும் கனடா வாழ் அரசியல் செயற்பாட்டாளருமான நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
கடந்த 14-01-2025 அன்று பொங்கல் தினத்தன்று நடைபெற்ற மேற்படி விழாவில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டார்கள். அன்றைய தினம் மேடையில் பல பாடசாலை மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்களையும் ‘அனைத்துலக தமிழர் பேரவை’யின் தலைவரும் கனடா வாழ் அரசியல் செயற்பாட்டாளருமான நிமால் விநாயகமூர்த்தி வ ழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது