சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் திமுக மக்களவை எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜரானார். திமுக அமைச்சர் துரைமுருகனின் மகனும், மக்களவை உறுப்பினருமான கதிர் ஆனந்தின் கல்லூரியிலும் அவருக்கு சொந்தமான பல இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையில் எம்பி கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரியில் ரூ.13.7 கோடிக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்ததாக தகவல் வெளியானது.
இதனையடுத்து இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராக கதிர் ஆனந்துக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் இன்று சென்னை நுங்கம்பாக்கம் கிரீம்ஸ் ரோடு அமலாக்கத்துறை மண்டல அலுவலகதத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார். எம்பி கதிர் ஆனந்துடன் மூத்த வழக்கறிஞர்கள் ஒருசிலரும் விசாரணைக்கு சென்றுள்ளனர். அமைச்சர் துரைமுருகனின் சொத்து மதிப்புகள், கதிர் ஆனந்தின் சொத்து மதிப்புகள், தற்போது கைப்பற்றப்பட்ட 13 கோடி ரூபாய்க்கு ஆவணங்கள் குறித்தததுக்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகிறது.