குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக பணியாற்றிய மாநில காவல்துறை அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ரெயில்வே காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு அதிபர் விருது மற்றும் பதக்கம் வழங்கப்படும். இந்த ஆண்டு நாடு முழுவதும் 746 பேருக்கு அதிபர் விருதுகள், பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழக காவல்துறையில் மெச்சத்தகுந்த வகையில் சிறப்பாக செயல்பட்டதற்கான அதிபர் விருது தமிழகத்தை சேர்ந்த ஜ.ஜி.க்கள் துரைக்குமார், ராதிகா ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழகத்தை சேர்ந்த 21 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பாக சேவையாற்றியதற்கான அதிபர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) டில்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அதிபர் திரவுபதி முர்மு விருது வழங்கி கவுரவிக்க உள்ளார். தமிழகத்தை சேர்ந்த காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஜெயலட்சுமி, ஜி.ஸ்டாலின், கூடுதல் கண்காணிப்பாளர்கள் எஸ்.தினகரன், பிரபாகரன், துணை ஆணையர் வீரபாண்டி, இணை காவல்துறை கண்காணிப்பாளர்ககள் மதியழகன், பாபு மற்றும் காவல்துறை அதிகாரிகள் சந்திரசேகரன், கணேஷ், ஜெடிடியா, பிரபாகர், பிரதாப் பிரேம்குமார், தென்னரசு, வேலு, அகிலா, குமார், அசோகன், சுரேஷ்கு மார், விஜயலட்சுமி, சிவகுமார், ஆர்.குமார் ஆகியோருக்கு அதிபர் திரவுபதி முர்மு இன்று விருது வழங்கி கவுரவிக்கிறார்.