ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளது. எனவே எல்லையோர மாகாணங்களில் பாகிஸ்தான் ராணுவம் கண்காணிப்பை பலப்படுத்தி உள்ளது. இந்தநிலையில் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்குள்ள தேரா இஸ்மாயில்கான் நகரில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பின்னர் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவரும் தெஹ்ரீக்-இ-தலீபான் பாகிஸ்தான் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.