மன்னார்மாவட்டத்தின் கட்டுக்கரை குளத்தின் கீழ் 2020மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான கால போக விவசாய நெற்செய்கைக்கான நீர் திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (13) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
குறித்த நிகழ்வு சர்வமத தலைவர்களின் ஆசியோடு,மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம் பெற்றது.
இதில், விவசாயிகள், கமக்கார அமைப்பின் பிரதி நிதிகள்,மன்னார் மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர்,நீர் பாசன பொறியியலாளர்,நானாட்டான பிரதேச சபையின் உப தவிசாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் கால போக விவசாய நெற்செய்கைக்கான நீரை வைபவ ரீதியாக திறந்து வைத்தார்