இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் ‘நிறம் மாறும் உலகில்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது அந்த வகையில். நா. முத்துகுமார் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் யோகி பாபு , அப்துல் மாலிக் கதாப்பாத்திரத்தில் நட்டி, மலர் கதாப்பாத்திரத்தில் காவ்யா அறிவுமணி, அபி கதாப்பாத்திரத்தில் நடிகை லவ்லின் சந்திரசேகர், விஜி கதாப்பாத்திரத்தில் விஜி சந்திரசேகர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
